• Jul 25 2025

என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கேட்கும் வெண்பா- கொந்தளித்த பாரதி

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா .இத் தொடரில் சமீபத்தில் தான் தீவிரவாதி சீக்வன்ஸ் முடிவுற்றது.அத்தோடு பாரதி மற்றும் கண்ணம்மா வேலை பார்க்கும் மருத்துவமனையை தீவிரவாதிகள் ஹைஜெக் செய்திருந்தனர்.இதன் பின்னர் தீவிரவாதிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற துவங்கியதால் பிணைக்கைதிகளை அடுத்தடுத்து வெளியில் அனுப்பிய தீவிரவாதிகள், பாரதியை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு அவர் உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டி மிரட்டி வந்தனர்.

மேலும் அந்த நேரத்தில் கண்ணம்மா தனது உயிரையும்  துச்சமென எண்ணிக் பாரதியை விட்டு நீங்காது அவரை கட்டிக்கணித்தபடி போராடி தீவிரவாதிகள் இடம் இருந்து கணவனை மீட்டு எடுத்தார்.எனினும் தற்போது இருவரும் பாரதியின் வீட்டில் தான் உள்ளார். இதன் காரணமாக கண்ணம்மா குறித்த எண்ணங்கள் பாரதி மனதில் மலரத் ஆரம்பமாகி உள்ளது. இது சௌந்தர்யாவுக்கு மகிழ்ச்சி கொடுத்து வரும் நிலையில்  இன்னொரு பக்கம் புது பூகம்பம் ரெடியாகிவிட்டது.

அதாவது வில்லி வெண்பா ரோஹித் மூலமாக கர்பமாகிவிட்ட நிலையில் தற்போது வெண்பா பாரதியிடம் வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சி இருப்பது இன்றைய எபிசோடில் வந்திருக்கிறது.

நான் பப் போனேன், அங்கு யாரோ எனக்கு தெரியாமல் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து சீரழித்துவிட்டார்கள். அது யார் என தேடினேன், கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்.

"முகம் தெரியாத ஒருவரின் குழந்தை எனக்குள் வளர்கிறது, இந்த நேரத்தில் என் அம்மா திருமண ஏற்பாடு செய்திருக்கிறார். குழந்தையை கலைக்க எனக்கு மனம் வரவில்லை. அதனால் என் குழந்தைக்கு இனிஷியல் வேண்டும் என்பதற்காக நீ எனக்கு தாலி கட்ட வேண்டும்" என பாரதியிடம் கெஞ்சுகிறார்.

அத்தோடு  பாரதி அதை கேட்டு கடும் அதிர்ச்சி ஆகி திட்டுகிறார். யாரோ குழந்தைக்கு நான் அப்பா ஆகணுமா என கேட்கிறார். இன்னும் சில காலத்திற்கு இந்த பிரச்சனை தான் ஓடப்போகிறது.







Advertisement

Advertisement