• Jul 23 2025

தளபதி 68 விஜய்க்கு வில்லனாக பாலிவுட் மாஸ் ஹீரோவை தட்டித் தூக்கிய வெங்கட்பிரபு..யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் அடுத்து தளபதி68 படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கான லுக் டெஸ்ட் செய்ய சமீபத்தியில் படக்குழு அமெரிக்கா சென்றது.


அங்கு விஜய் உடன் தியேட்டரில் படம் பார்க்கும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் வெங்கட் பிரபு வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் படுவைரல் ஆனது.


தளபதி 68ல் வில்லனாக பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். நடிகர் அமீர் கான் கடைசியாக நடித்த லால் சிங் சத்தா படம் பிளாப் ஆன பிறகு எந்த புது படத்திலும் நடிக்காமல் இருக்கிறார்.


இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யா கல்பாத்தி சமீபத்தில் அமீர் கானை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் புகைப்படமும் வெளியாகி இருந்தது.


அதனால் அமீர் கான் தான் தளபதி68 வில்லனாக நடிக்க போகிறார் என தகவல் பரவி வருகிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement