• Jul 23 2025

ரோபோ ஷங்கரைத் தொடர்ந்து எலும்பும் தோலுமாக மாறிய வெங்கட் பிரபு- வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் வெங்கட் பிரபு திரைலகில் தன்னுடைய 16 ஆண்டு காலத்தை இயக்குநராக வெற்றிகரமான கடந்துள்ளார். சென்னை 28 படத்தில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு, மன்மத லீலை போன்ற படங்களை இவர் வெற்றிப்படங்களாக கொடுத்துள்ளார். இதில் அஜித்தை மிகவும் ஸ்டைலாக வெளிப்படுத்தி மங்காத்தா படத்தை கொடுத்திருந்தார். அதில் வரும் நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாகவே இருக்கறது என்ற டயலாக் அஜித் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. 

தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு படத்தையும் சிறப்பாக கொடுத்திருந்தார். டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. சிம்புவிற்கும் மாநாடு படம் சிறப்பாக கைக்கொடுத்து அவரது கேரியரை மீட்டுக் கொடுத்துள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமான பாணியில் கதைக்களத்தை கையில் எடுத்து, அதை மிகவும் கவனமாக கையாண்டிருந்தார் வெங்கட் பிரபு.


 இந்தப் படத்தை தொடர்ந்து கொரோனா காலத்திலும் நேரத்தை சரியாக பயன்படுத்தி மன்மத லீலை என்ற படத்தை அசோக் செல்வன் நடிப்பில் இயக்கியிருந்தார். யூத்களை கவரும்வகையில் இந்தப் படம் அமைந்தது. தன்னுடைய படங்களில் யூத்களை கவரும்வகையில்தான் வழக்கமாக கதைக்களத்தை கையாள்வார் வெங்கட்பிரபு. இவரது படங்களில் காமெடி, நட்பு தூக்கலாக இருக்கும் அந்த வகையில் மன்மத லீலை படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நாக சைத்தன்யாவை ஹீரோவாக வைத்து கஸ்டடி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் பேக்கிரவுண்ட் இசைக்காக தற்போது துபாயில் யுவன் சங்கர் ராஜாவுடன் இசைக்கோர்ப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் 16 ஆண்டுகளை திரையுலகில் கடந்ததற்கு கடவுளுக்கும் சரணுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இனிமேல்தான் சிறப்பான பல விஷயங்கள் வெளிவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யுவனுடன் வெங்கட் பிரபு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக அவர் காணப்படுகிறார். எப்போதும் புஷ்டியாக காணப்படுபவர் வெங்கட்பிரபு. அவரின் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

















Advertisement

Advertisement