• Jul 24 2025

வெங்கடேஷ் பட் மேல செம கோவம்...உண்மையை உடைத்த குக்வித்கேமாளி பிரபலம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றுவரை அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.இது தற்போது விஜய் டிவியில் மூன்று சீசன்களை கடந்து விட்ட நிலையில், தற்போது நான்காவது சீசன் இடம்பெறுகின்றது.

இது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் கோமாளிகளை வைத்து அதிக நகைச்சுவையை கொடுக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.


இவ்வாறுஇருக்கையில் குக்வித்கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கு பற்றியவர் தான் நடிகர் முத்துக்குமார்.இவர் குக்வித் கோமாளி பற்றி பேசிய  விடயம் வைரலாகி வருகின்றது.அதாவது இதில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட்டை பற்றி தான் பேசியுள்ளார்.


அதாவது முதல் நாளே எனக்கு வெங்கடேஷ் பட் மீது செப கோவம் வந்திட்டு.அதாவது கோமாளியாக இருந்த பரத்தை கரண்டி எடுத்து  அடிக்கிறார். “ என்ன இந்த ஆளு அடிக்கிறாரு...” என்று தான் மனதில தோனிச்சு.ஏன்னா எனக்கு எதுவுமே தெரியாது. அது முதல் நாள் நடந்த சம்பவம் .


அதுக்கு அப்புறம் தான் அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவந்தது.அதாவது பரத்தும் சும்மா இருக்காமல் “ பட்டுக்குட்டி பாத்து கத்துகொள் கத்துக்குட்டி..” என்று சொல்லி இருகிறான்.அதனால தான் அவர் அப்படி செய்து இருக்கிறார்.அவர் எந்த பெரிய மனுசன் அவரைப் பார்த்து அப்படி சொன்னால் அவருக்கு கோவம் வரும் தானே எனக் கூறியிருந்தார் நடிகர் முத்துக்குமார்.




Advertisement

Advertisement