• Jul 25 2025

வேறொரு பெண்ணுடன் உறவில் வருங்காலக் கணவர்... பார்த்ததும் பதறி அடித்து அப்பாவிடம் அழுத வெண்ணிலா... இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த ஒரு ஹிட் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் ஆனது முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.


மேலும் இந்த சீரியல் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


அதில் வெண்ணிலாவிற்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை அன்பு வேறொரு பெண்ணுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த வெண்ணிலா பதறி அடித்துச் சென்று தந்தையிடம் "அவங்களுக்குள்ள நிறைய நாளாக தொடர்பு இருக்குப் போல" எனக் கூறி அழுகின்றார். 


ஆனால் வெண்ணிலாவின் தந்தையோ வெண்ணிலா கூறிய எதையும் நம்பவில்லை. அதை எல்லாம் நாம சரி பண்ணிக்கலாம் எனக் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது "நாளைக்கு மட்டும் இந்தக் கல்யாணம் நடக்காவிட்டால் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்" எனவும் கூறி செல்கின்றார். என்ன செய்வதென்று தெரியாமல் வெண்ணிலா கதறி அழுகின்றார்.  


Advertisement

Advertisement