• Sep 10 2025

பரமுவைக் கைது செய்த போலீஸ்... பொண்ணுங்கள கடத்தியது யார் என்ற உண்மையை உடைத்த வெற்றி... திரு திருவென முழிக்கும் கண்மணி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் பெண்களை யாரோ கடத்திக் கொண்டு போவதால் அதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என அபி கடும் முயற்சியில் இறங்கினார்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் போலீசார், சிட்டிக்குள் பொண்ணுங்கள கடத்திறது இவன் தான் எனக் கூறி பரமுவைக் கைது செய்கின்றனர். இதனையடுத்து காஞ்சிபுரத்தை உலுக்கிய ஒரு கேஷையே முடிச்சு வைச்சிட்டீங்க எனக்கூறி அபிக்கு பலரும் வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.


மறுபுறம் வெற்றி "இந்தக் கபிலன் சாரை புத்திசாலின்னு நினைச்சிட்டு இருந்தோம், கடைசியில் பரமுவைப் போய் அரெஸ்ட் பண்ணி இருக்கார், ஆனால் பரமு இதை செய்யவே இல்லை, பொண்ணுங்கள கடத்திறது ஒரு பொண்ணுதான்" எனக் கூறுகின்றார்.


இதனைக் கேட்டதும் கண்மணி திருதிருவென முழிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement