• Jul 24 2025

புதிய சாதனை படைத்த வெற்றிமாறனின் விடுதலை படம்...என்ன தெரியுமா? செம ஹப்பியில் படக்குழு..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி விஜய் சேதுபதி,சூரி,கெளதம் மேனன்,ராஜீவ் மேனன், பவானி ஷ்ரி ஆகியவர்கள் நடித்தப் படம் விடுதலை.இந்தப் படத்தின் வழியாக நடிகர் சூரி முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரைக்கு வந்த விடுதலைப் படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. 

கதாநாயகனாக நடித்த சூரியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.இதனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி விடுதலைப் படத்தில்  இடம்பெறாத காட்சிகள் சிலவற்றை சேர்த்த இயக்குநர் பிரதி  zee5 ஓடிடி தளத்தில் வெளியானது.

வெளியான மிகக் குறைவான நேரத்திற்குள்ளாக 50 மில்லியன் ஸ்ட்ரீமிங்க மினிட்ஸை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.இந்தத் தகவலை ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது .




Advertisement

Advertisement