• Jul 25 2025

திடீரென நீண்ட நாள் நண்பர்களைச் சந்தித்த விக்கி மற்றும் நயன்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு நூற்றுக் கணக்கான நடிகைகள் புதிதாக அறிமுகமாகிறார்கள். நடிப்பதற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இவர்களிடம் இருந்தாலும், அதில் வெகு சிலரால் மட்டுமே ரசிகர்களின் அன்பைப் பெற்று வெற்றிக்கொடி நாட்ட முடிகிறது.

இவ்வாறு தனது சொந்த வாழ்விலும் சரி சினிமாவிலும் சரி தனக்கென ஒரு  பாதை வகுத்து முன்னணி நட்சத்திரமாக திகழந்து நிற்பவர் தான் நடிகை நயன்தாரா.இவர் கடந்த 206ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.


தொடர்ந்து இந்த ஆண்டு பெற்றொர் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்டாக திருமணம் செய்ததோடு வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றுள்ளார். இதனால் வரும் 18ம் திகதி இவரின் 38வது பிறந்த நாள் என்பதால் வித்தியாசமாகக் கொண்டாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நயன்தாராவின் கணவர் தாம் இருவரும் வெளியூருக்குச் சென்றால் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது இருவரும் தமது நீண்ட நாள் நண்பர்களைச் சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement