• Jul 25 2025

வெற்றி-அபி போடும் செல்லச்சண்டை; வெளியான சூப்பர் ப்ரோமோ! இந்த சீரியல அடிச்சிக்க ஆளே இல்ல..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.

குறித்த ப்ரோமோவில், காலை சாப்பாடு கேட்கிறார் அபி. அருகில் இருந்த வெற்றி அவருக்கு சாப்பாடை எடுத்து பரிமாறுகிறார். இதை அவதானித்த அபி, 'உன்னட்ட யாரு சாப்பாடு கேட்டா' என கோவத்தில் கத்துகிறார்.

'உனக்கு சாப்பாடு போடணும் என்டு எனக்கு அவசியம் இல்ல'. என இருவரும் செல்லச் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இதையடுத்து அவ்விடத்திற்கு 'ஸ்டாப் இட்' எனக் கூறிக்கொண்டு வந்த சுடர் இருவரையும் சமாதானம் செய்ய முயல்கிறாள்.


அதன்படி, இருவருக்கும் பிரன்ட்ஷிப் பேன்டை கொடுத்து கையில் கட்டுமாறு சொல்லுகிறார்.இடையில் 'இது என்ன என்டு' அபி கேட்க 'இது கூட தெரியாம கலெக்டரா இருக்கா' என கலாய்த்து கொள்கிறார் வெற்றி.

அதன்பின், அபி அந்த பிரன்ட்ஷிப் பேன்டை வாங்கி வெற்றியின் கையில் கட்டுகிறார். ஆனால் வெற்றியோ அபியின் கையில் கட்டுவதற்கு பதிலாக சுடரின் காதில் கட்டியுள்ளார். இவ்வாறு குறித்த ப்ரோமோ முடிவடைகிறது.

 


Advertisement

Advertisement