• Jul 26 2025

விஜய் அங்கிளைப் பார்க்க வேண்டும் என அடம்பிடித்த குழந்தை.. வீடியோ காலில் வந்த தளபதி.. தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாகவே நடிகர் விஜய்யைப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இவரின் நடிப்பிற்கும் சரி, நடனத்திற்கும் சரி, நகைச்சுவை கலந்த பேச்சிற்கும் சரி மயங்காதோர் இல்லை. சிறியோர் முதல் பெரியோர் வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.


அந்தவகையில் பல்லாவரத்தை சேர்ந்த குழந்தை ஒன்று சில நாட்களுக்கு முன்பாக வாரிசு படத்தின் பாடலை பார்த்து விட்டு விஜய் அங்கிளை பார்க்க வேண்டும் என அடம்பிடித்தது. இது குறித்த வீடியோ ஆனது சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. 


அதுமட்டுமல்லாது அந்த வீடியோ நடிகர் விஜய்யின் பார்வைக்கு பட்ட நிலையில், உடனடியாக அந்த குழந்தையிடம் வீடியோ காலில் விஜய் பேசி இருக்கின்றார். அதாவது "தோசை சாப்பிட்டேன் என்றும் நீங்க ரொம்ப க்யூட்னும்" விஜய்யிடம் அந்த குட்டிக் குழந்தை பேசும் காட்சி அடங்கிய அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement