• Jul 26 2025

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு.. குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் ரம்பா.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கிய 1993-ஆம் ஆண்டு வெளியான 'ஆ ஒக்கடு அடக்கு' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாகவே திரையுலகில் கால் பதித்திருந்தார்.


எனினும் தமிழில் இவரது முதல் படம் 'உழவன்' ஆகும். இப்படம் இவருக்கு பெரியளவில் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை ஆயினும் இவர் நடித்த இரண்டாவது படம் ஆகிய 'உள்ளத்தை அள்ளித்தா' இவருக்கு வெற்றியையும் புகழையும் அள்ளிக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக முன்னேறியிருந்தார்.


இவ்வாறாக படங்களில் பிஸியாக வலம் வந்த இவர் 2010-ஆம் ஆண்டில் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை மணந்து கொண்டு கனடாவின் ரொறன்ரோவில் செட்டில் ஆனார்.

இவரின் கணவனான இந்திரன் பத்மநாதன் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர்களின் சிறந்த நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்தை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் தனது நேரத்தை செலவிட்டு வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர்.


அந்தவகையில் இவர் தற்போது தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடும் வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement