• Jul 23 2025

அஜித் மகள் அனோஷ்காவா இது.. குழந்தையாய் இருந்து குமரி ரேஞ்சிற்கு வளர்ந்திட்டாங்களே.. வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

1999இல் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன் நடிப்பில் வெளியான 'அமர்க்களம்' படத்தில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அதற்கு பிறகும் இருவரும் நடிக்க வேண்டாம் ரியல் லைஃப் ஜோடிகளாக மாறிடலாம் என முடிவு செய்து காதலித்து கல்யாணமும் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.


மேலும் இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இருப்பினும் இன்றுவரை தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திர ஜோடிகளில் முதன்மையானவர்களாக ‘அஜித் – ஷாலினி’ தம்பதியினர் இருந்து வருகின்றனர்.


மேலும் ரசிகர்களால் எப்போதும் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துவிட்டாலே, அது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலையில் தற்போது அவரின் மனைவி மற்றும் மகளது வீடியோ வெளியாகினால் விடுவார்களா..? 


அந்தவகையில் தற்போது கவின் நடிப்பில் வெளியான காதல் கதையம்சத்தை கொண்ட படமான 'டாடா' படத்தினைப் பார்ப்பதற்காக ஷாலினி தனது மகள் மற்றும் சகோதரியுடன் சென்றிருக்கின்றார். இதுகுறித்த வீடியோ ஆனது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  


Advertisement

Advertisement