• Jul 25 2025

பெல்லி டான்ஸ் ஆடிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவரே நடிகை ஸ்ரீதேவி. “அம்மாவிற்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை மகள்” என்பதை போல் இவரின் மகளான ஜான்வி கபூரும் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக ஜொலித்து வருகின்றார்.

இவர் கைவசம் பல படங்கள் வைத்து இருக்கும் நிலையில் தற்போது மிலி என்ற படத்தின் ரிலீசுக்காக ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்.

மலையாளத்தில் ஹெலன், தமிழில் அன்பிற்கினியாள் என்கிற பெயரில் வந்த கதை தான் ஹிந்தியில் ரிமேக் ஆகி இருக்கிறது. எனினும் அந்த கதையில் ஹீரோயின் வேலை செய்யும் கடையில் இருக்கும் பிரீசர் ரூமில் சிக்கிக்கொள்வார்.

மேலும்   அவர் உயிர்பிழைக்க படும் கஷ்டங்கள் தான் படத்தில் காட்டப்பட்டு இருக்கும். இப்படி ஒரு கதையில் நடித்தது தனக்கு நிஜத்திலேயே மன அழுத்தத்தை கொடுத்தது என ஜான்வி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது ஜான்வி மிலி படத்தின் ப்ரோமோஷனுக்காக கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் Jhalak Dikhhla Jaa 10 ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார்.

அதில் அவர் மேடையில் பெல்லி டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது. 





Advertisement

Advertisement