• Jul 26 2025

குழந்தைகளோடு குழந்தையாய் மாறி பிறந்தநாள் கொண்டாடிய தமன்னா... வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மில்க் பியூட்டியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை தமன்னா. இவர் மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு 'சாந்த் சே ரோஷன் செஹரா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார்.


அதன் பின்னர் 2006-ஆம் ஆண்டு 'கேடி' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து பல படங்கள் நடித்தாலும் அவருக்கு வணிகரீதியாக தோல்விகள் வர பின் 'கல்லூரி' படத்தின் மூலம் தனது நடிப்பால் கவனமீர்த்தார்.


தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் நேற்றைய தினம் இவரின் பிறந்தநாள் ஆகும். இதனை குழந்தைகளோடு இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கின்றார் தமன்னா.


இது குறித்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement