• Jul 25 2025

கேன்ஸ் பட விழாவில் நயன்தாரா இல்லாமல் தனியாக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன்! வைரலாகி வரும் புகைப்படங்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கேன்ஸ் திரைப்பட விழாவில், நயன்தாரா இல்லாமல் விக்னேஷ் சிவன் மட்டும் தனியாக கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன் கோட் - சூட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்கள், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 16-ஆம் தேதி துவங்கிய, கேன்ஸ் திரைப்பட விழாவில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் கேட் வாக் செய்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகை மிருணாள் தாகூர், ஊர்வசி ரவுதலே, ஐஸ்வர்யா ராய், எமி ஜாக்சன் போன்ற பல பிரபலங்கள் அணிந்திருந்த உடைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

அதே போல், இந்திய சார்பில் கேன்ஸ் திரைப்பட விழாவில், பங்கேற்பவர்களை பாஜக அமைச்சர் எல். முருகன் தலைமையில் அழைத்து சென்றுள்ளார். நடிகை குஷ்பூவும் பாஜக சார்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இயக்குநர், விக்னேஷ் சிவன், கேன்ஸ் திரைப்பட சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். ஆனால் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. எனவே, விக்னேஷ் சிவன் கேன்ஸ் பட விழாவிற்கு நயன்தாராவுடன் சென்றதாகவே ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் மட்டும் தனியாக சென்றுள்ளது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. எங்கு சென்றாலும் காதல் மனைவி நயன்தாராவுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை மட்டுமே, வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள விக்கி தனியாக எடுத்து கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற கோட் - சூட்டில், செம்ம கெத்தாக விக்கி உள்ளார். மேலும் நயன்தாரா, தன்னுடைய இரட்டை குழந்தைகளை கவனிக்கு கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்ள வில்லை என தெரிகிறது. விக்கியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement