• Jul 25 2025

உலகின் சிறந்த தாய் நயன்.. மகன்களின் புகைப்படத்தை வெளியிட்டு அர்த்தம் கூறிய விக்னேஷ் சிவன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி. இவர்கள் இருவரும் கடந்தாண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து கடந்த வருடமே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர்.


இருப்பினும் திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் இருவரும் விளக்கம் அளித்தனர். 


மேலும் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, இந்த பதிவில் குழந்தைகளின் பெயரில் இருக்கும் ‘N' என்ற வார்த்தை உலகின் சிறந்த தாய் நயன்தாரா என்பதை குறிக்கும் என கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்தப் பதிவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement