• Jul 24 2025

அஜித்தின் 'துணிவு' சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரில் சென்ற விக்னேஷ் சிவன்... ஓ இதுதான் விஷயமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வெற்றி நாயகனாக வெற்றிக் கொடி நாட்டி வருபவர் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'துணிவு'.


மேலும் துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படமானது வரும் பொங்கல் தினத்தையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

அந்தவகையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு அமோகமாக நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 'துணிவு' படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.


அத்தோடு தொடர்ந்து படத்தின் சில பேட்ச் வொர்க்குகள் சென்னை மவுண்ட்ரோடில் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு 'சில்லா சில்லா' என்ற பாடலின் சூட்டிங் கடந்த சில தினங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாது இன்றைய தினம் இந்தப் பாடலின் சூட்டிங்கும் நிறைவடையும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'துணிவு' படத்தின் இரண்டு போஸ்டர்களும் ஏற்கெனவே வெளியாகின. இதனிடையே தற்போது இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.  


இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தின் பாடல் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற நிலையில், அஜித்தின் 'ஏகே 62' படத்தின் டைரக்டரான விக்னேஷ் சிவன், சூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரில் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து 'ஏகே62' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் எடுக்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தான் நேரில் விசிட் அடித்திருக்கக் கூடும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement