• Jul 24 2025

விஜய்யும் அவருடைய அப்பாவும் எப்பவும் எதிர்திசை தான்- சாப்பாட்டு ரகசியத்தை கூறிய தளபதியின் அம்மா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக விளங்கி வருபவர் தான் விஜய். இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இடம் பெறும் டுதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே பாடல்  வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தாயாரும், இயக்குநர் & நடிகர் எஸ்ஏ சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர்,பிரபல சேனல் ஒன்றின் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


இதில் விஜய்க்காக பிரத்தியேகமான பிரட் பிரியாணியை தம்முடைய தோழி ரூபாவுடன் இணைந்து ஷோபா சமைத்தார். சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது பேசிய ஷோபா, “விஜய்க்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். ஞாயிற்றுக்கிழமை ஆனால் அவர் வீட்டுக்கு வந்தால் பிரியாணி மிகவும் நன்றாக இருக்கிறது என்று சொல்லி சாப்பிட்டு விடுவார், குறிப்பிட்ட அசைவ பிரியாணி என்று சொல்வதைவிட பிரியாணி என்றாலே அவருக்கு பிடிக்கும். சாம்பாரைப் பொறுத்தவரையில் நடுவில் நடுவில் வரக்கூடிய கொத்தமல்லியை தொந்தரவாக இருக்கக்கூடிய ஒன்று என்று சொல்லுவார்.” என்று கூறினார்.


மேலும் தன்னுடைய கணவர் மற்றும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் குறித்து பேசிய ஷோபா, “நான் ரசம், பருப்பு தொகையல் வைத்தால் கூட நன்றாக இருப்பதாக சொல்லி சாப்பிடுவார்” என்று கூறிய ஷோபா, “இந்த பிரட் பிரியாணியை செய்து வாரிசு பட சூட்டிங்கில் இருக்கும் விஜய்க்கு கொடுத்துவிட்டு நாமும் சாப்பிடலாம்” என்று கலகலவென்று பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement