• Jul 24 2025

இரண்டாவது மகளுடன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் விஜய் ஆண்டனி. ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக வலம் வரும் இவரது நடிப்பில் இறுதியாக  பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இவரின் அடுத்த படமான ரத்தம் திரைப்படம் அக்டோபர் மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது.


இதனிடையே, விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா, கடந்த வாரம் உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னையில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்த மீரா, தீவிரமான மன அழுத்தத்தில் இருந்ததால் தான் உயிரை விட்டதாக கூறப்பட்டது.இந்தச் சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.


 இந்நிலையில், மகள் உயிரிழந்த ஒரே வாரத்தில் தான் நடித்த ரத்தம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டார். இயக்குநர் சி.எஸ் அமுதனுடன் இணைந்து பேட்டியும் கொடுத்த விஜய் ஆண்டனி, ரத்தம் படத்தின் ப்ரமோஷனிலும் பங்கேற்றார். விஜய் ஆண்டனியின் இந்த முதிர்ச்சியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


முக்கியமாக, ரத்தம் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தனது இளைய மகளுடன் விஜய் ஆண்டனி கலந்துகொண்டது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மூத்த மகள் மீராவை பறிகொடுத்த விஜய் ஆண்டனி, அதிலிருந்து விரைவாக மீண்டு வருவதுடன், தனது இளைய மகளையும் பொதுநிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement