• Jul 25 2025

சுய நினைவை இழந்த விஜய் ஆன்டனி.. நாளை நடைபெறவுள்ள அறுவைச் சிகிச்சை.. கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் விஜய் ஆன்டனி. இருப்பினும் இவர் சினிமாவில் முதன் முதலில் இசையமைப்பாளராகவே அறிமுகமாகி இருந்தார். அதன் பின்பு தான் நடிகர், பட தொகுப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுள்ள ஒருவராக மாறினார். 


அத்தோடு விஜய் ஆன்டனி தற்போது தீவிரமாக நடிப்பில் தான் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அந்தவகையில் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை விட, ஒவ்வொரு படத்திற்கும் தன் வித்தியாசமான நடிப்பை மிகவும் எதார்த்தமாக வெளிப்படுத்தி வரும் திறமை கொண்ட ஒருவராகவும் விளங்கி வருகின்றார். 

அதாவது இவர் நடிப்பில் வெளியான' திமிர் பிடித்தவன்', 'கொலைகாரன்', 'பிச்சைக்காரன்' போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தற்போது இவர் 'பிச்சைக்காரன் 2', கொலை, ரத்தம், மழை பிடித்த மனிதன், வள்ளி மயில் போன்ற அடுத்தடுத்த படங்களில், மிகவும் பிசியாக நடித்து வருகிறார். 


இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீலங்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விஜய் ஆன்டனி மற்றும் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஏர் ஆம்புலன்ஸ் மேல் மூலம், கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியானது.


அந்தவகையில் தற்போது விஜய் ஆன்டனி, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சுயநினைவை இழந்த நிலையில் உள்ள அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாது நாளை அவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைப்போல் அவருடைய முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement