• Jul 24 2025

மகள் இறப்பினைத் தொடர்ந்து.. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய விஜய் ஆண்டனி... படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் ஆவார். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். 

மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அவரின் மூத்த மகள் மீரா சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.


இதனையடுத்து விஜய் ஆண்டனி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீளாத் துயரில் இருந்து வருகின்றனர். பலரும் இன்றுவரை விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலினைத் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது பழையபடி ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் விஜய் ஆண்டனி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது புது இயக்குநர் ஒருவரின் படத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இப்படத்தினுடைய படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வருகின்றது. எனவே இன்று முதல் விஜய் ஆண்டனி குறித்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement