• Jul 24 2025

பள்ளி நிகழ்வில் பொறுப்போடு செயற்பட்ட விஜய் ஆண்டனியின் மகள் மீரா- இறப்பிற்கு பின் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர். இசையமைப்பாளர் மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். யாரிடமும் அதிர்ந்து பேசாமல் அனைவரையும் மதிக்கும் குணமுடைய அவருக்கு மீரா, லாரா என்ற இரண்டு பெண் குழந்தைகள்.

இரண்டு பெண் குழந்தைகளில் மீரா சர்ச் பார்க் கான்வெண்ட்டில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். தனது தந்தை போலவே பல விஷயங்களில் திறமையை வெளிப்படுத்திய மீரா கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 

சூழல் இப்படி இருக்க அவர்  நேற்று அதிகாலை எதிர்பாராத விதமாக உயிரை மாய்த்துக் கொண்டார்.. அவரது இறப்பு திரையுலகினர் மட்டுமின்றி சாமானிய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி மனைவி அவரது மகள் மீரா பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் மேடையேறி சில உறுதிமொழிகளை ஏற்கிறார்.படிப்பிலும், பிற நடவடிக்கைகளிலும் மீரா சிறந்து விளங்கிவந்தவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது இந்த காணொளி. தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement