• Jul 26 2025

விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு சப்ரைஸ் கொடுத்த ரசிகர்... ஆனந்த கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்.. என்ன சப்ரைஸ் தெரியுமா... வைரலாகும் வீடியோஇதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா இறந்த பிறகு சோகத்தில் இருந்து மீண்டு வர அவர் மறுபடியும் சினிமா திரையுலகில் தொடர்ந்து பயணிக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் ரசிகர் ஒருவர் அவருக்கு பெரிய சப்ரிஸ் ஒன்று கொடுத்துள்ளார். 


இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சிறந்த நடிகரும் ஆவார். இவர் பல கருத்துள்ள படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ரசிகர் பட்டாளமும் உருவாக்கி இருக்கின்றனர். இவ்வாறு சினிமா வாழ்கையிலும் சரி சொந்த வாழ்க்கையிலும் சரி சிறப்பாக இருந்த இவர் வாழ்வில் திடீரென நடந்த சோகம் தான் அவரது மகள் மீரா இறந்த நிகழ்வு. 


விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து சினிமா திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மறுபடியும் சினிமா படங்களில் நடிப்பதற்கு முன்வந்துள்ளார். தான் செய்ய போகும் நல்ல காரியங்கள் அனைத்தும் அவரது மகள் மீராவே முன்னின்று செய்வாள் என கூறியிருந்தார். 


இந்நிலையில் விஜய் அண்டனியில் தீவிர ரசிகர் ஒருவர் விஜய் ஆண்டனி குடும்பத்தினருக்கு பெரிய சப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது விஜய் ஆண்டனி குடும்பத்தினரின் படங்களை வெட்டி ஒட்டி அதனை தனது கைகளால் முழுமையாக வரைந்து பிரேம் செய்து பெரிய மால் ஒன்றில் காட்சிபடுத்தி விஜய் ஆண்டனி குடும்பத்தினரை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



 

Advertisement

Advertisement