• Jul 25 2025

பத்துத் தல இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த தளபதி விஜய்- கத்திக் கூச்சலிடும் ரசிகர்கள்- லேட்டஸ்ட் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசியாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இன்று மாலை பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகின்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரத்யேகமாக லைவ் இசை நடத்த உள்ளார்.

இரவு 10 மணிக்கு ஷார்ப்பாக பத்து தல ட்ரெய்லர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.மேலும் ரசிகர்கள் சிம்புவைப் பார்ப்பதற்காக மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் சிம்புவும் வித்தியாசமாக கெட்டப்பில் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார். இப்படியான நிலையில் வாரிசு படத்தில் இடம் பெற்ற தீ தளபதி பாடலினை சிம்பு தான் பாடியிருந்தார். இதற்காக வாரிசு இசைவெளியீட்டு விழாவின் போது விஜய் சிம்புவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இதனை தற்பொழுது சிம்புவுக்கு ஒளிபரப்புச் செய்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் கத்திக் கூச்சலிட்டு வருவதையும் காணலாம். மேலும் இப்படம் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement