• Jul 25 2025

ஆசை மனைவி சங்கீதாவுடன்.. வீட்டில் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் வெளிவந்த வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புக்களில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


இவ்வாறாக விஜய் எந்தளவுக்கு சினிமாவில் பிசியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு அவர் குறித்த வதந்திகளும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது சமீபத்தில் தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரியப்போவதாக தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இருப்பினும் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் விஜய் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை. இது வெறும் வதந்தி தான் என்று ஒரு பக்கம் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விஜய்யின் விவாகரத்து குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், விஜய் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்த வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


அதில் தனது வீட்டில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் அமர்ந்து தோசை சுட்டு சாப்பிடுகிறார். இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement