• Jul 24 2025

அந்த சீன் எடுக்கும் போது விஜய் சேரும் நானும் தூங்கிட்டோம்- கில்லி பட லைட்டவுஸ் சீன் குறித்து ஓபனாக பேசிய த்ரிஷா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் த்ரிஷா. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படத்தில் குந்தவையாக நடித்து அசத்தி இருந்த த்ரிஷாவுக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. 

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் த்ரிஷாவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்துவிட்டது.இதனால் அவர் சம்பளத்தையும் ஒரு படத்துக்கு 10 கோடி என உயர்த்தி இருந்தார். நடிகை த்ரிஷா நடிப்பில் தற்போது தி ரோடு, லியோ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. 


இதில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பின் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் த்ரிஷா அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் கில்லி படத்தில் எடுத்த லைட் ஹவுஸ் சீன் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு த்ரிஷா கூறிய பதிலாவது அந்த சீசன் எடுக்கும் போது அதிகாலை 2 மணியிருக்கும். அதனால நாங்க ரெண்டு பேருமே துாங்கிட்டோம். அப்போ தரணி சேர் வந்து இது ரொமான்ஸ் சீசன் இதுக்கே துாங்கினா எப்பிடி என்று கேட்டார். ரெண்டு பேருமே மோர்னிங்ல இருந்து ஷுட்ல இருந்ததால் ரொம்ப ரயேட்டாக இருந்தோம். 


திரையில் காண்பிக்கும் போது எல்லாம் அழகாகத் தான் தெரியும். ஆனால் அதுக்கு பின்னாடி எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம் என்பது எங்களுக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement