• Jul 25 2025

சரக்குடன் விஜய் தேவரகொண்டா.. படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த ராஷ்மிகா..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 புத்தாண்டை முன்னிட்டு டோலிவுட்டின் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா சட்டை அணியாமல் கையில் சரக்குடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் பதிவிட்ட அதே இடத்தில் தான் மாலத்தீவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் முன்னதாக புகைப்படம்  போட்டார் என நெட்டிசன்கள் கண்டு பிடித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததில் இருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

அத்தோடு கடந்த ஆண்டு இருவரும் ஒன்றாக மாலத்தீவுக்கு சென்ற நிலையில், அப்போது எடுத்த போட்டோக்களைத்தான் இப்போ வெளியிட்டுள்ளனர் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு இருவரது காதலையும் கன்ஃபார்ம் பண்ண கார்னர் செய்து வருகின்றனர்.

ஒரு ஆண்டில் முக்கியமான பல தருணங்கள் நம்மை சிரிக்க வைத்திருக்கும், சில அழ வைத்திருக்கும். சில வெற்றிகள் கிடைத்திருக்கும். சில தோல்விகளும் சூழ்ந்திருக்கும்.மேலும் அவற்றை எல்லாமே சரிசமமாக எடுத்துக் கொண்டு முன்னேறுவது தான் வாழ்க்கை என கையில் சரக்குடன் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவை போட்டு புத்தாண்டு தத்துவத்தை பொழிந்து தள்ளியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

ரெசார்ட் ஒன்றில் விஜய் தேவரகொண்டா புகைப்படம் போட்ட நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ரெசார்ட் ஒன்றில் படுத்துக் கொண்டு சன் பாத் எடுக்கும் செம ஹாட்டான போட்டோவை போட்டு அதில் வானவில் எல்லாம் தெரியும் வண்ணம் இருக்க வெல்கம் 2023 என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.


அத்தோடு கடந்த அக்டோபரில் இதே இடத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் இருப்பது போல மாலத்தீவில் இருந்த போது போட்டோ போட்டார். ஆனால், அப்போது எடுத்த எந்தவொரு புகைப்படத்தையும்  விஜய் தேவரகொண்டா பதிவிடவில்லை. புத்தாண்டை முன்னிட்டு ராஷ்மிகா எடுத்த போட்டோவைத்தான் இப்போ விஜய் தேவரகொண்டா பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து சொல்லி உள்ளார் என ரசிகர்கள் கண்டுபிடித்து கார்னர் செய்து வருகின்றனர்.


அப்பவே ராஷ்மிகா அணிந்திருந்த கண்ணாடி விஜய் தேவரகொண்டா விமான நிலையத்தில் வரும் போது போட்டிருந்த அதே கண்ணாடி தான் என நெட்டிசன்கள் கண்டு பிடித்து கமெண்ட் போட்டிருந்தனர். ஆனால், இதுவரை இது தொடர்பாக எந்தவொரு விளக்கமோ மறுப்போ நடிகை ராஷ்மிகாவோ விஜய் தேவரகொண்டாவோ கொடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அத்தோடு, அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்து வரும் அறிவிப்பையும் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டு உள்ளார் ராஷ்மிகா.


மேலும் இந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் மண்ணை கவ்விய நிலையில், அடுத்ததாக சமந்தா உடன் அவர் இணைந்து நடித்துள்ள குஷி படம் வெளிவர உள்ளது. சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement

Advertisement