• Jul 25 2025

லியோ பட டீசரில் இருந்த முக்கிய அடையாளம்.. சர்ச்சையில் சிக்குவாரா விஜய்..? ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருபவர் இவர் விஜய். இவர் நடிப்பில் உருவாகும் படங்களுக்கென்று எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருவது வழமை. அந்தவகையில் வாரிசு படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவரின் 67ஆவது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் கசியத் தொடங்கி விட்டன.


வாரிசு படத்தின் ரீலீஸைத் தொடர்ந்து 'தளபதி 67' படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட வண்ணமே இருக்கின்றன. இப்படத்தில் நீண்டகால இடைவெளியின் பின் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கின்றது.


மேலும் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் காஷ்மீரில் தங்கி முகாமிட்டுள்ளனர். 

இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசர் நேற்றைய தினம் வெளியாகி இருக்கின்றது. 'லியோ' என்ற அந்த தலைப்பினை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். அதேசமயத்தில் தற்போது இன்னொரு முக்கிய விடயமும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. 


அதாவது இந்தப் படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றில் விஜய்க்கு பின்னணியில் சிலுவை சிம்பள் இருக்கிறது. இதனால் இதை வைத்தே படம் குறித்து புதிய சர்ச்சை ஒன்று கிளம்ப வாய்ப்பு உள்ளதாகவும், இதுவே படத்திற்கு ஃப்ரீ ப்ரோமோஷன் செய்யும் எனவும் பல ரசிகர்கள் தங்களுடைய கமெண்டுகளின் மூலமாக கிண்டலடித்து வருகின்றனர்.


விஜய் படங்களின் வாயிலாக கிறிஸ்தவ மதத்திற்கு சப்போர்ட் செய்வதாக ஏற்கெனவே பல கருத்துக்கள் வெளியாகி இருந்தமை நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் சிலுவை அடையாளத்தை தொடர்ந்து மீண்டும் இது குறித்த சர்ச்சைகள் உருவாகுமா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement