• Jul 24 2025

தளபதியைப் பார்க்க ஆசையாசையாய் வந்த தயாரிப்பாளர்... சரத்குமாரால் கடுப்பான விஜய்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைத் தன்னுடைய நடிப்பினால் கட்டிப்போட்ட ஒருவரே நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வாரிசு படம் வெளியாகி இருக்கின்றது. இப்பபடத்தின் உடைய வெற்றியை முடித்துவிட்டு தன்னுடைய 67-ஆவது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க காஷ்மீர் சென்று விட்டார். 


இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சரத்குமார் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இப்படத்தினுடைய ஷூட்டிங் சமயத்தில் விஜய் சரத்குமார் செய்த ஒரு செயலால் கடுப்பாகி சில நாட்கள் பேசாமலே இருந்துள்ளாராம். 


அதாவது விஜய்யின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றிய நிறுவனம் என்றால் அது சூப்பர் குட் பிலிம்ஸ் தான். இந்நிறுவனத்தின் உடைய தலைவரான ஆர்பி செளத்ரி, விஜய்யை வைத்து பூவே உனக்காக, ஷாஜகான், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பல சூப்பட் ஹிட் படங்களை தயாரித்தார். 

இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் 100-ஆவது படத்தினை விஜய்யை வைத்து எடுத்தே ஆகவேண்டும் என்று சரத்குமாரிடம் கூறியிருக்கிறார். இதனால் வாரிசு படத்தின் போது விஜய்யை சந்திக்க சரத்குமாரிடம் ஆர் பி செளத்ரி உதவி கேட்டுள்ளார். ஆனால், விஜய்யிடம் சம்மதம் வாங்காமலே சரத்குமார், ஆர்பி செளத்ரியை அவரிடம் கூட்டிச் சென்றுள்ளார்.


அவரைக் கண்டதும் விஜய்யும் எதையோ சொல்லி சமாளித்து அமைதியாக வழி அனுப்பி வைத்துள்ளார். இதனால் விஜய் கடுமையான கோபத்தில் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிவிட்டார். அதன்பின் ஒரு சில நாட்கள் ஷூட்டிங் சமயத்தை தவிர மற்ற நேரங்களில் சரத்குமாரிடம் பேசாமல் இருந்துள்ளார்.

இதனையறிந்த பலரும் இதுவே பழைய விஜய்-ஆக இருந்திருந்தால் நெப்போலியனை அவமானப்படுத்தியது போல் சரத்குமாரையும் எதையாவது சொல்லி அவமானப்படுத்தியிருப்பார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement