• Jul 25 2025

வாரிசு பட சக்சஸ் பார்ட்டியில் கேங்க்ஸ்டர் லுக்கில் வந்த விஜய்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸான திரைப்படம் தான் வாரிசு. விஜய் நாயகனாக நடித்திருந்த இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார். தில் ராஜு தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார்.


 இதுதவிர ஷியாம், பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, சங்கீதா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.குடும்ப உறவுகளை மையமாக வைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் எடுக்கப்பட்டிருந்த இப்படம் பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவரும் வகையில் இருந்ததால் 2 வாரங்களைக் கடந்தும் வெற்றிநடை போட்டு வருகிறது. 


அதுமட்டுமின்றி இப்படம் உலகளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.வாரிசு படத்தின் வெற்றியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தில் ராஜு, இயக்குனர் வம்சி ஆகியோருடன் கேக்வெட்டி கொண்டாடிய விஜய், தற்போது படக்குழுவினர் அனைவரையும் அழைத்து சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அப்படத்திற்கான கேங்க்ஸ்டர் செம்ம மாஸாக கெட் அப்பில் வந்து வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்டார்.


இதுதவிர நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ராதிகா, சம்யுக்தா, சங்கீதா, நடிகர்கள் ஷியாம், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் விவேக், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன் உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Advertisement

Advertisement