• Jul 25 2025

விஜய் அந்த மாதிரியான ஆளே கிடையாது - சீக்ரெட் சொன்ன நடிகர் சித்தார்த்..! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இயக்கவில்லை. நடிகராக இருந்தாலும் அவரால் ஒரு மெகா ஹிட்டை இத்தனை வருடங்களாக கொடுக்க முடியவில்லை.

தற்போது கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார். 

இந்தச் சூழலில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சித்தார்த் நடிகர் விஜய்க்கும் தனக்கும் இருக்கும் பழக்கம் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,"விஜய் என்னை க்யூட் என்று சொல்வார். ஆனால் அவரைவிட வேறு யார் க்யூட்டாக இருக்கமுடியும். 

ஆகஸ்ட் மாதம் 2006ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் தங்கியிருந்த ஒரு ஹோட்டலின் க்ரவுண்ட் ப்ளோரில் அவர் தங்கியிருந்தார். நாங்கள் இரண்டு பேருமே அப்போது ஒன்றாக டின்னர் சாப்பிட்டோம். அவரை நான் எப்போதுமே விஜய் என்றுதான் அழைப்பேன். அதை பார்த்துவிட்டு ஏன் அபப்டி கூப்பிடுகிறீர்கள் என சில கேட்டார்கள்.

ஆனால் விஜய் அது மாதிரியான ஆள் கிடையாது. அவர் ரொம்பவே க்யூட்டான, நார்மலான ஆள். நான் நடித்ததில் பொம்மரிலும் படம் அவருக்கு ரொம்பவே பிடிக்கும். அதில் எனது நடனத்தை பார்த்துவிட்டு இந்த டான்ஸ நீ எப்படி ஆடுன. எப்படி வந்தது என கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். உடனே நான் அவர் செய்த சில விஷயங்கள் குறித்து கேட்டேன். அதற்கு அவரோ, நீ முதல் இதை சொல்லு என கேட்டார். விஜய்யை எங்கு பார்த்தாலும் கட்டிப்பிடித்துக்கொண்டு ரொம்ப நேரம் விலகமாட்டேன்.

எங்கள் இருவருக்கும் பிடிக்கும்: அவருக்கு என்னையும், எனக்கு அவரையும் ரொம்ப பிடிக்கும். அவரை சூப்பர் ஸ்டார், தளபதி என பல பட்டங்கள் சொல்லி அழைத்தாலும் நான் கல்லூரியில் படித்தபோது விஜய்யின் ரசிகராக இருந்ததை மறக்க முடியாது. அவர் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும்.அவர் பாடிய பாடல்களின் கேசட் தேயும் அளவுக்கு கேட்டிருக்கிறேன். மற்றவர்களுக்கு நான் வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் அவர் என்னிடம் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே மற்றவர்களிடமும் இருக்க விட்டால் நன்றாக இருக்கும்" கூறினார்.

இந்த பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement