• Jul 25 2025

லோகேஷிற்கு கண்டிஷனுக்கு மேல் கண்டிஷன் போடும் விஜய்- இதெல்லாம் வேண்டாம் என்று சொன்னாரா?- குழப்பத்தில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!


பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது. 

காஷ்மீரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் ஒரு வாரமும், ஹைதராபாத்தில் க்ளைமேக்ஸையும் ஷெட்யூல் செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் காஷ்மீரில் படக்குழு பட்ட கஷ்டத்தை பார்த்த பிறகு அவுட்டோர் ஷூட்டிங்கே இனி வேண்டாம் எனவும், சென்னையில் செட் போட்டே படத்தை முடித்துவிடலாம் எனவும் விஜய் கூறியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சென்னையில் இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவருகிறது.


ஆனால் சென்னையில் நடக்கும் ஷூட்டிங்கில் விஜய் ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போட்டிருப்பதாக தகவல் ஒன்று உலாவுகிறது. அதாவது இரவு நேர காட்சிகளை பெரும்பாலும் குறைக்கும்படி கண்டிஷன் போடும் விஜய் அவுட்டோர் வேண்டவே வேண்டாம் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம். ஆனால் பெரும்பாலும் இரவு நேர காட்சிகளை படமாக்குவதில் விருப்பம் கொண்டவர் லோகேஷ் கனகராஜ். மேலும், சில காட்சிகளை அவுட்டோரில் படமாக்கவும், இரவு நேரத்தில் படமாக்கவும் அவர் திட்டமிட்டிருந்தாராம்.


இப்போது விஜய் இப்படி கண்டிஷன்ஸ் போட்டிருப்பதால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் லோகேஷ். இப்படிப்பட்ட தகவல் வெளியானவுடன், இரவு நேரத்தில் படமாக்குவதுதான் லோகேஷுக்கு அதீத விருப்பம் உடையது. ஆனால் அதையே கூடாது என சொல்வதன் மூலம் இயக்குநரின் அடிவயிற்றிலேயே விஜய் கைவைத்துவிட்டாரா என சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர். அதேசமயம், விஜய் எப்போது இயக்குநரின் உரிமையில் தலையிடமாட்டார். எனவே இதுபோன்ற தகவல்களை வேண்டுமென்றே யாரோ கிளப்பிவிடுகிறார்கள் என விஜய் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Advertisement

Advertisement