• Jul 24 2025

வாரிசு பட இயக்குநர் வம்சி மீது மனஸ்தாபத்தில் இருக்கும் விஜய்- இது தான் விஷயமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து தளபதி விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கின்றார்.

இது தவிர பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது இயக்குநர் வம்சிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்காக ஒதுக்கிய தேதிகளை விட இப்போது கூடுதலாக தேதிகள் கேட்டுள்ளாராம் வம்சி. அதனால் வம்சி மீது விஜய் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்யின் அடுத்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement