• Jul 25 2025

பிரபல நடிகரிடம் மன்னிப்புக் கேட்ட விஜய் சேதுபதி- அடடே இதெல்லாம் ஒரு காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்து பின்னர் கதாநாயகன் வில்லன் என பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்த வரும் முக்கியமான நடிகர் தான் விஜய் சேதுபதி.ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்த வித ரோலாக இருந்தாலும் தயங்காமல் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றார்.

ரஜினி, விஜய், கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார்.இவரது நடிப்பில் இறுதியாக டிஎஸ்பி என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.


அட்லி இயக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ளார் விஜய் சேதுபதி. அவர் கூறியதாவது, முதலில் ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க பயந்தேன்.சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒரு நடிகருடன் நடிப்பதில் எனக்கு முதலில் தயக்கம் இருந்தது.


 ஆனால் ஷாருக்கான் தான் ஒரு நடிகர் என்று காட்டிக்கொள்ளாமல் என்னிடம் இயல்பாக பழகினார். அது எனக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுத்தது. பின்பு பல விஷயங்களை அவரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.சில சமயங்களில் நான் அதிகமாக பேசுவதாக எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். 


அதற்கு அவர் ஏன் மன்னிப்பு கேட்குறீங்க, என்ன வேணாலும் கேளுங்க பேசலாம் என்றார் என விஜய் சேதுபதி கூறியுள்ளார். தற்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது என்பதும்  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement