• Jul 25 2025

பருந்தாகுது ஊர்க்குருவி என்னும் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

stella / 3 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கோ. தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பருந்தாகுது ஊர்க்குருவி. காயத்ரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்

பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில் ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார் அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் சர்வைவர் தொடராக சொல்வதாக உருவாகிறது.

அதாவது வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒருபோதும் நிலைக்காது என்ற கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது மேலும், ராட்சசன் வினோத் சாகர், அருள் சங்கர், கோடங்கி வடிவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement