• Jul 24 2025

மறைந்த நடிகர் மனோபாலா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி- குவியும் திரைப்பிரபலங்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் இயக்குநராகவும், நடிகராகவும், தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளவர் மனோபாலா. இதுவரை சுமார் 40 படங்களை இயக்கியுள்ள மனோ பாலா, 200க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்த பிரபலமானவர். 

மேலும் சின்ன திரையில் இரண்டு சீரியல்களில் நடித்துள்ளது மட்டுமின்றி, மூன்று டிவி தொடர்களையும் இயக்கி உள்ளார். சுமார் 48 வருடங்களாக திரையுலகில் இருந்து வரும் மனோ பாலா அனைத்து பிரபலன்களிடமும் மிகவும் அன்பாக பழக கூடியவர். அதேபோல் பெரிதாக எந்த ஒரு சண்டை சர்ச்சைகளிலும் சிக்காத பிரபலமாக இருந்து வந்தார். 


ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கல்லீரல் பிரச்சனை காரணமாகவும்,  மனோபாலா  சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.வீட்டில் இருந்தே தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த மனோ பாலா, நேற்றைய திறம் இறப்புக்குள்ளானார்.


இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் மோகன் ராதிகா சரத்குமார் உதயநிதி சமுத்திரக்கனி ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement