• Jul 26 2025

படங்களில் பிஸியாக இருக்கும் விஜய்சேதுபதி – அவருக்கு பதில் டப்பிங் பேசிய விஜய்டிவி பிரபலம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.மேலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் தயாராகி உள்ளது.

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக உள்ளது.இவ்வாறுஇருக்கையில் விஜய் சேதுபதி அவர்கள் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிவடைந்தது. ஆனால், இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் மட்டும் ஹிட் அடித்து விடுக்குறது.

எனினும் இதற்கு உதாரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த கமலஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படத்தை சொல்லலாம். இதற்கடுத்து வந்த DSP திரைப்படம் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடதக்கது. இருந்தாலும் விஜய் சேதுபதி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அந்த வகையில் தற்போது உருவாகிவரும் ஓடிடி தொடர் தான் Farzi. இந்த தொடரில் நடிகர் விஜய் சேதுபதி “மைக்கில்” என்ற கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார்.


மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹாஹாத் கபூருடன் இணைந்த முதல் முறையாக நடிக்கிறார். இந்த படத்தை ஃபேமிலி மேன் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இந்த தொடரை இயக்குகின்றனர். மேலும் இந்த தொடர் தமிழ், ஹிந்தி என இருமொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் இந்த தொடரின் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.


இப்படி பட்ட நிலையில் விஜய் சேதுபதிதான் ஹிந்தி மொழில் டப்பிங் கொடுத்தார் என்றுருந்த போது தமிழில் இவருக்கு பதிலாக தொகுப்பாளர் மற்றும் சின்னத்திரை மிமிக்கிரி ஆர்டிஸ்ட்டான TSK இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்துள்ளார்.எனினும் இதனை பற்றி TSK தன்னுடைய சோசியல் மீடியா முகப்பு பக்கத்தில் Farzi தொடரின் ஓடிடி ட்ரைலரை பகிர்ந்து பதிவு ஒன்றை போட்டு அதனை உறுதி படுத்தியுள்ளார்.


மேலும் அந்த பதிவில் “நான் நடிகர் விஜய்சேதுபதி அண்ணாவுக்கு Farzi தொடரில் தமிழ் மற்றும் தெலுங்குல் அவருடைய குரலை பிரதியெடுத்து பண்ண முடியது, நான் அதை முயற்சி செய்தேன், அவர் மற்ற படங்களின் கமிட்மென்ட்களில் பிஸியாக இருக்கிறார், அதனால் அவருக்கு டப்பிங் செய்ய இயக்குநர்கள் ராஜ் & Dk சார் அனுமதி பெற்றோம். தயவு செய்து என்னை வழக்கமாக ஆதரிக்கவும் மிக்க நன்றி சேகர் சேகா சார் எல்லாவற்றிற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இயக்குனர்கள் ராஜ் மட்டும் டிகே இணைந்து இயக்கிய ஃபேமிலி மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement