• Jul 23 2025

பூஜையுடன் ஆரம்பமானது விஜய் சேதுபதியின் புதிய படம்... அடடே அதுவும் மலேசியாவிலா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடிப்பில் இன்றைய தினம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதனையடுத்து பி.ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். 

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாது ருக்மணி வசந்த், பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 


அத்தோடு கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் பிரமாண்டமாக  இசையமைக்கிறார். மேலும் படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் மேற்கொள்வதோடு, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். 


அந்தவகையில் ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த படத்தை 7 சிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் ஈப்போ நகரில் இன்று (மே 19) பூஜையுடன் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தது.

Advertisement

Advertisement