• Jul 24 2025

தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாக வைரலாகும் விஜய்சேதுபதியின் புதிய போஸ்டர்- ரசிகர்கள் செய்த ரகளை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நடிகர் தான் விஜய் சேதுபதி.இவர் ஆரம்பத்தில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இதன் பின்னர் கதாநாயகனாக 25 படங்களுக்கு மேல் நடிததிருப்பார்.

இது தவிர குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் தமிழ் நாட்டில் கட்டிட வேலை, ஹோட்டல் போன்ற பல இடங்களில் வடமாநிலத்தினர் வேலை செய்து வருகின்றனர்.


அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் மக்களை காட்டிலும் வடமாநில மக்கள் தான் அதிகமாக உள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு தமிழ் இளைஞர்களை 100 மேற்பட்ட வடமாநிலத்தினர் கட்டை போன்றவற்றை வைத்து துரத்தி அடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் தீ போல வேகமாக பரவியது. இது குறித்து பல பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், அவரின் புகைப்படத்தை வைத்து, "அபாயம்! இது தமிழ் நாடா? இல்லை வடநாடா? என்று போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். இதை பார்த்த பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement