• Jul 24 2025

முதல் முறையாக தமிழில் விஜய் சேதுபதியின் புதிய வெப் சீரிஸ் - வெளியான அறிவிப்பு இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், நடிகர் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் மணிகண்டன் இயக்குகிறார்.

இயக்குநர் மணிகண்டன் ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளைத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக விளங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் பல மடங்கு எகிற வைத்திருக்கிறது.

இந்தப் புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 7C’s Entertainment Pvt Ltd (P ArumugaKumar) தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


Advertisement

Advertisement