• Jul 26 2025

இதனால் இவர் மனதில் எவ்வளவு வலி ஏற்பட்டிருக்கும்... விஜய் சேதுபதிக்காக வருந்தும் தமிழ் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கத்ரீனா கைஃபுடன் சேர்ந்து 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இவற்றைத் தொடர்ந்து தற்போது தி ஃபேமிலி மேன் வெப்தொடர் புகழ் ராஜ் மற்றும் டி.கே. இயக்கியிருக்கும் ஃபர்சி தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மேலும் இந்தத் வெப்தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது இது தான் விஜய் சேதுபதி நடித்திருக்கும் முதல் வெப்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஃபர்சி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட விஜய் சேதுபதி பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "இந்தி ப்ராஜெக்டில் நடிக்கிறீர்களா என்று யார் கேட்டாலும், நான் ஷாஹிதுடன் சேர்ந்து நடிக்கிறேன் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

அதன் பிறகே அவர்கள், ஓ வாவ், ஓகே என்கிறார்கள். அதனால் நான் ஷாருக் சார் படத்தில் நடிக்கிறேன், கத்ரீனா கைஃபுடன் நடிக்கிறேன் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அப்பொழுது தான் என்னை மதிக்கிறார்கள். எனவே, நான் யாருடன் சேர்ந்து நடிக்கிறேன் என்பது தான் இந்தியில் முக்கியம் பெறுகிறது" என்றார்.


மேலும் அவர் பேசுகையில் "ஃபர்சியை என் வெப்தொடர் டெப்யூ என எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஏனென்றால் இதை டெப்யூவாக நான் பார்க்கவில்லை. கடந்த 2010-ஆம் ஆண்டு நான் ஹீரோவாக அறிமுகமானேன். அது நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. 55 படங்களில் நடித்துவிட்டேன். இந்நிலையில் மீண்டும் குழந்தை போன்று ஆவதாக இருக்கிறது. அதனால் இதை டெப்யூ என சொல்ல மாட்டேன்" என்றார்.

அதுமட்டுமல்லாது "குறும்படமோ, ஆவணப் படமோ, ஒவ்வொரு காட்சியும் படம் என நினைக்கிறேன். ரசிகர்களை கவர ஒவ்வொரு ஷாட்டிலும் மெனக்கெடுகிறோம்" என விஜய் சேதுபதி தெரிவித்தார். இவ்வாறாக இந்தி ரசிகர்கள் தன்னை தன் திறமைக்காக அல்லாமல் தான் யாருடன் சேர்ந்து நடிக்கிறேன் என்பதற்காக மதிப்பதை விஜய் சேதுபதி வெளிப்படையாக தெரிவித்தது வட நாட்டுக்காரர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. 


அதேநேரத்தில் விஜய் சேதுபதி மனதில் எவ்வளவு வருத்தம் இருந்தால் இப்படி பேசியிருப்பார் என தமிழ் ரசிகர்கள் பலரும் ஃபீல் செய்கிறார்கள். அத்தோடு தமிழ் தவிர்த்து பிற மொழிப் படங்களிலும் பிசியாக இருக்கும் விஜய் சேதுபதிக்கே இப்படி ஒரு நிலையா எனக் கூறி கவலைப்பட்டும் வருகின்றனர் தமிழ் ரசிகர்கள்.

Advertisement

Advertisement