• Jul 23 2025

சுடச்சுட பிரியாணி மற்றும் சிக்கன் உடன்... ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படம் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கில் 'வாரசுடு' என்ற டைட்டிலில் வெளியாகும் இந்தப் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சினை காணப்படுகிறது. 

அந்தவகையில் பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் முன்னுரிமை என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இவ்வாறாக வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் பலவும் எழுந்துள்ள நிலையில், பனையூரில் ரசிகர்மன்ற நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து வருகிறார் விஜய். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் அவர்களின் அடையாள அட்டையுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் பனையூர் 'விஜய் மக்கள் இயக்கம்' அலுவலகத்தில் குவிந்துள்ள இந்த ரசிகர்களுக்கு தடபுடலான விருந்து நடைபெற்று வருகிறது. மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடந்திவரும் அதேநேரம், அலுவலகம் வெளியே ஏராளமான விஜய் ரசிகர்கள் பலரும் திரண்டுள்ளனர். 


அதுமட்டுமல்லாது ரசிகர்களுக்கு சுடச் சுட பிரியாணியும் சிக்கன் 65யும் தயாராகி வருகிறது. மேலும் வாரிசு படத்தின் வெளியீட்டில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதை தீர்க்கும் முகமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த இக்கட்டான நிலையிலும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க விஜய் ஏற்பாடு செய்துள்ளது பாராட்டத்தக்க ஒரு விடயமாகும். இதனால் பனையூரில் குவிந்துள்ள விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement