• Jul 25 2025

புது வீடு கட்டிய விஜய் டிவி ராமர்-வெளியான புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி என்றாலே சில முகங்கம் நமக்கு நியாபகம் வரும். அதில் ஒருவர் தான் ராமர், இவர் காமெடிக்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் சிலர் உள்ளார்கள் என்று தான் கூறவேண்டும்.

மேலும் எந்த புது நிகழ்ச்சி ஆரம்பமானாலும் அதில் அவர் வந்துவிடுகிறார், அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்ற அளவிற்கு உள்ளது.இவர் இப்போது படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார், அடுத்தடுத்து நிறைய படங்களும் நடிக்க இருக்கிறார்.

அவர் பெண் வேஷத்தில் 'என்னமா இப்படி பண்றீங்களேமா' என செய்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஸ்பூப் மிகப்பெரிய அளவில் ஹிட். தற்போது டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களிலும் தோன்றி வருகிறார் ராமர்.

இந்நிலையில் தற்போது ராமர் சொந்தமாக ஒரு புது வீட்டை கட்டி இருக்கிறார். இன்று அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..





Advertisement

Advertisement