• Jul 25 2025

சன் டிவியை ஓரங்கட்டிய விஜய் டிவி.. முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி சேனல்கள் தங்களுக்குள்ளான போட்டியை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு வருகின்றனர்.அடுத்தடுத்த சிறப்பான நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை இந்த சேனல்கள் கொடுத்துவரும் நிலையில், சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையில் போட்டி அதிகமாக காணப்படுகிறது.

கடந்த வாரத்தில் சன் டிவியை பின்னுக்குத் தள்ளிவிட்டு Urban Categoryயில் விஜய் டிவி முதலிடத்தில் இருந்தது. இந்த சேனலில் பாக்கியலட்சுமி தொடர் முதலிடத்தை பிடித்திருந்தது.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான Urban category பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதலிடத்தில் தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் 10.4 புள்ளிகளுடன் உள்ளது. இதையடுத்து கடந்த வாரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தன்னுடைய இடத்தை சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரிடம் விட்டுக் கொடுத்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை மற்றும் சன் டிவியின் இனியா தொடர்கள் இடம் பெற்றுள்ளன.

சன் டிவியில் ஆல்யா மானசா லீட் கேரக்டரில் நடித்துவரும் இனியா தொடர், அந்த சேனலின் கயல் தொடருக்கு அடுத்தபடியாகவே தொடர்ந்து இருந்த நிலையில், தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கயல் தொடர் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக சன் டிவிதான் 2192.14 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. இந்த சேனலுக்கு அடுத்தபடியாக ஸ்டார் விஜய் 1417.96 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement