• Jul 25 2025

கறுப்பு நிறத்தில் புது கார் வாங்கிய விஜய் டிவி ரீமா அசோக்... விலை எவ்வளவு தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அந்தளவிற்கு ஒரு சில சின்னத்திரைப் பிரபலங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறான ஒருவர் தான் ரீமா அசோக். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர்.


அதுமட்டுமல்லாது "கல்யாணம் முதல் காதல் வரை, றெக்ககட்டி பறக்குது மனசு, சின்னதம்பி, நாச்சியார்புரம்" போன்ற சீரியல்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்திருக்கின்றார். 


மேலும் ரீமா அசோக் தனியாக மேக்கப், போட்டோ கிராபி போன்ற பல தொழில்களை செய்து வருகிறார், அத்தோடு சின்னத்திரை பிரபலங்கள் பலரையும் வைத்து நிறைய போட்டோ ஷுட் நடத்தியும் உள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை ரீமாவும் புதிய கார் ஒன்றை தனது குடும்பத்துடன் சென்று வாங்கியுள்ளார்.


அந்தவகையில் கருப்பு நிறத்தில் உள்ள அந்தக் காரின் பெயர் Harrier, இந்த காரின் விலை சென்னையில் ரூ. 15 முதல் ரூ. 25 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த மகிழ்ச்சியான பதிவை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement