• Jul 24 2025

கெட்ட வார்த்தை பேசிய விஜய் வர்மா...? எனக்கும் எக்கச்சக்கமாக வரும்-உண்மையை போட்டுடைத்த பிரதீப் ஆண்டனி... சூடுபிடிக்கும் பிக்பாஸ்.. வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் 7 ஆவது சீசன் மிகவும் பிரமாண்டமாக நேற்றைய தினம் (அக்டோபர்-1) தொடங்கி இருக்கிறது. அத்தோடு வழக்கமாக ஒரே வீட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் நிலையில், இந்த முறை இரண்டு வீடு என்பதால் புதிய ட்விஸ்ட்கள், புது டாஸ்க்குகள் இடம் பெறவுள்ளன.


அதன் முதற்கட்டமாக இன்றைய ப்ரோமோவில் 6போட்டியாளர்கள் small house க்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது மற்றுமோர் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் இந்த வார கேப்டன் ஆகிய விஜய் வர்மா, லியோ படத்தில் இடம் பெற்ற பேட் தாஸ் (Baddass) பாடல் பற்றி பேசுகின்றார். 


இதனை சக போட்டியாளர்களான அக்‌ஷரா உதயகுமார், ஐஷூ, விசித்ரா, ரவீனா ஆகியோர் சுற்றி இருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரவீனா பேட் தாஸ் (Baddass) என்பதன் உடைய அர்த்தம் புரியாமல் அது கெட்ட வார்த்தையா என விஜய் வர்மாவிடம் கேட்கிறார். 

பதிலுக்கு சக போட்டியாளரான பிரதீப் ஆண்டனியும் விஜய் வர்மாவிடம் "கெட்ட வார்த்தை பேசிட்டிங்களா?” என கேட்கின்றார். அதற்கு விஜய் வர்மா இல்லை என்கிறார். பதிலுக்கு பிரதீப் ஆண்டனி "எனக்கு ஒரு ஃப்ளோல எக்கச்சக்கமாக கெட்ட வார்த்தை வந்து விடும். ஒருவேளை நீங்கள் ஆரம்பித்து வைத்து விட்டால் சந்தோஷமாக இருக்கும். நான் ரொம்ப கேவலமாக பேசுவேன்" என வெளிப்படையாக கூறுகின்றார்.


இதனைக் கேட்டதும் சுற்றி இருந்த சக போட்டியாளர்கள் அதிர்ச்சிடைகின்றனர். மேலும் இந்த வீடியோவைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் முதல் நாளிலேயே விஜய் ஆண்டனி தன்னுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்த தொடங்கி விட்டதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் இவர்களின் உண்மை முகம் தெரிந்து விடும் எனவும் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement