• Jul 24 2025

பாடலால் பதிலடி கொடுத்த விஜய்... "பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுபுள்ளி எழுதி கொடலுருவுற சம்பவம் உறுதி"....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

"லியோ" ஆடியோ லன்ச் இல்லனா என்ன பாடலில் பதிலடி கொடுப்பேன் என்று  மூலம் தனது பாடல் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் விஜய்.எப்போது வரும் என்று ஆரவாரமாக காத்துக் கொண்டிருந்த லியோ படத்தின் ஆடியோ லன்ச் தற்போது ரத்தானது விஜய்யின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தது. இந்த சமயத்தில் அவர்களை குஷிப்படுத்தும் விதமாக நேற்று லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரிகளை இறக்கி இருக்கிறார்கள் திரைபடக்குழுவினர்.


இந்த பாடல் வரிகள் கேட்பதற்கு ரொம்பவே ஆனந்தமாக இருக்கிறது என்று விஜய்யின் ரசிகர்கள் மிகவும் சந்தோசப்பட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் இந்த பாடல் வரிகள் மூலம் ரஜினிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். அதாவது ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் உள்ள பாடல் வரிகள் விஜய்யை தாக்கி தான் வந்திருக்கிறது என்று எல்லோராலும் பேசப்பட்டுவந்தது. 


இதற்கு பதிலடியாக  நேற்று வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்களின் வரிகள் மூலம் தரமான சம்பவத்தை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த நேரத்தில் அந்த பாடல் வெளியிடுவதற்கு முக்கிய  காரணம் லியோ ஆடியோ லன்ச் இல்லாததுதான். நடிகர் விஜய் குட்டி கதை சொல்லமுடியாமல் போனதால்  அதற்கு பதிலாக பாடலை வெளியிட்டுள்ளனர்.


இதனால் விஜய்யின் ரசிகர்கள் எங்களுக்கு இது போதும் தலைவா என்று அவர்களுடைய சந்தோஷங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆக மொத்தத்தில் மறைமுகமாக விஜய் மற்றும் ரஜினி ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டுதான் வருகிறார்கள்.மேலும் விஜய் இனிமேல் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் போட்டி போட தயாராக இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.



Advertisement

Advertisement