• Jul 24 2025

ஐஸ்வர்யா வீட்டில் திருடியவர் தான் விஜய் யேசுதாஸ் வீட்டிலும் திருடினாரா..? வெளியான பரபரப்புத் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய நகை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்த சம்பவம் ஆனது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்கிற பெண்ணும், அவருக்கு துணையாக இருந்த டிரைவர் வெங்கடேசன் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இந்த திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பிரபல பாடகரும், நடிகருமான கே ஜே ஜேசுதாஸின் மகன், விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்து சுமார் 60 லட்சம் மதிப்புள்ள, தங்கம் மற்றும் வைர நகைகள் காணாமல் போனதாக விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா சென்னை அபிராமிபுரம் போலீசில் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.


ஆனாலும் நகை திருட்டு நடந்து, ஒரு மாதம் ஆன பின்னரே இந்த புகாரை அவர் அளித்திருந்தார். இதனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும் விஜய் யேசுதாஸ் வெளிநாடு சென்றுள்ளதால், இது குறித்து புகார் கொடுத்த அவரின் மனைவியிடம் விசாரித்த போது, அவர் பதட்டத்தில் மாறிமாறி பலவற்றையும் பேசிவருவதாக கூறப்படுகிறது. 

எனவே இதன் காரணமாக விஜய் யேசுதாஸ் வெளிநாட்டில் இருந்து வந்ததும், இருவரையும் அமரவைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தர்ஷனா கூடவே இருந்து நண்பர்கள் அல்லது உறவினர்கள் செய்தார்களா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.


அதுமட்டுமல்லாது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை திருட்டு வழக்கில் சிக்கிய டிரைவர் வெங்கடேஷ்  என்பவரின் பெயரும் அடிபடுகிறது. அதாவது வெங்கடேஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் டிரைவராக சேருவதற்கு முன்பு, விஜய் யேசுதாஸ் வீட்டில் தான் பணியாற்றியுள்ளார். 

மேலும் விஜய் யேசுதாஸ் வீட்டில் திடீர் என ட்ரைவர் வேண்டும் என அழைப்புகள் வந்தாலும் அங்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார் வெங்கடேஷ். ஆகையால் இந்த திருட்டு சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருக்குமா? என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement