• Jul 25 2025

பாலியல் தொல்லை.. 14மாதம் சித்திரவதை.. தயாரிப்பாளர் மீது விஜயகாந்த் பட நடிகை புகார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடிப்பில் உருவான 'கஜேந்திரா' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை புளோரா சைனி. இதனைத் தொடர்ந்து 'குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புளோரா புகார் ஒன்றின் மூலாமாக தெரிவித்து உள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஓப்பனாக பேசும்போது, "நான் 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். இந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன், விளம்பரங்களிலும் நடித்தேன். பின்னர் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை மாறிப்போனது.


அந்தத் தயாரிப்பாளர் என்னைத் தவறாக பயன்படுத்தினார். கடுமையாக அடித்து காயப்படுத்திக் கொடுமைப்படுத்தினார். எனது போனைப் பிடுங்கி கொண்டார். 14 மாதங்கள் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் சித்திரவதை செய்தார்.

மற்றவர்களிடம் பேசவிடாமல் தடுத்தார். அவரிடம் நரக வேதனையை அனுபவித்தேன். இறுதியில் அந்த தயாரிப்பாளரை விட்டு ஓடிவந்து எனது பெற்றோருடன் சேர்ந்து விட்டேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து கூறியுள்ளார். 


இவர் கூறியுள்ள இந்த விடயமானது அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. 

Advertisement

Advertisement