• Jul 25 2025

ரோஜாவின் கணவருக்கு விஜயகாந்த் கொடுத்த அவமானம்- கடைசியில் நடந்த சம்பவம்- அடப்பாவமே....

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய இயக்குநராக வலம் வந்தவர் தான் ஆர்.கே செல்வமணி.இவர் பிலிம் இன்ஸ்டியூட்டில் சினிமா படித்து விட்டு மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தாராம். அப்போது அவருக்கு ஆக்‌ஷன் படங்கள் எடுக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவாக இருந்ததாம். 

தொடர்ந்து சிவகுமாரிடம் கதை சொல்லி இருக்கிறார். புது இயக்குநர்களிடம் நடிப்பது இல்லை எனக் கூறிவிட்டாராம். இதே பதில் தான் சத்யராஜிடம் வந்து இருக்கிறது.தொடர்ந்து, அப்போது தான் ஊமை விழிகள் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று இருந்தது. அப்படத்தினை ஒரு புதுமுக இயக்குநர் தான் இயக்கினார் என்பதால் விஜயகாந்திடம் கதை சொல்லலாம் என எண்ணி அவரை காண சென்றார். 


ஆனால் அங்கு விஜயகாந்தினை சந்திக்க இயலவில்லை. இப்ராகிம் ராவுத்தர் விஜயகாந்தின் கால்ஷூட் 2 வருடம் ப்ரீயாக இல்லை எனக் கூறிவிட்டார்.ஆனால் அவரின் மனதை கவர ஹாலிவுட் நாயர்களின் ஸ்டில்களில் விஜயகாந்தின் ஸ்டில்களை வைத்து புலன் விசாரணை கதையை ராவுத்தரிடமே கூறி இருக்கிறார். இதை கேட்ட அவருக்கு கதை ரொம்ப பிடித்து விட்டதாம்.

உடனே படப்பிடிப்புகள் துவங்கினால் கூட விஜயகாந்திடம் பேசவே முடியவில்லையாம். பிறர் மூலம் தான் காட்சிகள் குறித்து விளக்க முடியுமாம். இதில் படக்குழுவில் இருந்த சிலர் விஜயகாந்திடம், செல்வமணியை குறித்து தவறாக சித்தரித்து வைத்திருந்தனராம்.இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையே படத்தினை முடித்தார். 1990ம் ஆண்டு தை பொங்கல் தினத்தில் படம் ரிலீஸ் ஆகியது. ஆனால் மொத்த படக்குழு முதல்நாள் காட்சிக்கு சென்ற நிலையில், இயக்குநரை படம் பார்க்கவிடாமல் தியேட்டர் வாசலிலேயே நிறுத்தினராம்.


ராவுத்தர் இந்த படம் ஓடவில்லை என்றால் என்னை பார்க்கவே வராதே எனக் கூறிவிட்டாராம். ஆனால் அவர் வார்த்தைக்கு மாறாக புலன் விசாரணை படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனையை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement